அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்: பூக்களை பரிசளித்து வரவேற்ற மூத்த மாணவ-மாணவிகள்
சென்னை: தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் பருவத் தேர்வுகள் நடைபெற்றது. பின்னர் ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டது. அதன் பின்னர் ஜூன் 16ம் தேதி கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே 2025-26ம் கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கைகான கலந்தாய்வு நடைபெற்று, ஜூன் 30ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கலை மற்றும் அறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. பள்ளியிலிருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன் வந்த மாணவ-மாணவிகளை வரவேற்க பல கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.



