Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை ரத்து செய்தது அதிமுக ஆட்சியில்தான்: அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சட்டப்பேரவையில் நேற்று செல்லூர் ராஜு (அதிமுக) பேசும்போது, அரசு ஊழியர்களுக்கு 1-4-2026ம் ஆண்டு முதல் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட வேண்டியதை இந்த ஆண்டு கூறியது ஏன் என்று கேட்டார்.

* நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை நீங்கள் (அதிமுக) ஏன் நிறுத்தினீர்கள்? நீங்கள் நிறுத்தியதை நாங்கள் கொண்டு வருவதாக அறிவித்துள்ளோம். அரசு ஊழியர்களின் சலுகையை பறித்துவிட்டு இப்போது நீலி கண்ணீர் வடிக்கிறீர்கள்.

எடப்பாடி பழனிசாமி: திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை செய்யாததால் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசின் நிலை என்ன?

* அமைச்சர் தங்கம் தென்னரசு: அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முதல்வர், நிதித்துறை செயலாளரிடம் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

* எடப்பாடி பழனிசாமி: அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை நாங்கள் நிறுத்தவில்லை.

* தங்கம் தென்னரசு: சரண்டர் விடுப்பை ரத்து செய்தது திமுக ஆட்சியில் இல்லை. அதிமுக ஆட்சியில்தான்.

* அமைச்சர் எ.வ.வேலு: விடுமுறை எடுக்காமல் அரசு ஊழியர்கள் பணியாற்றினால், அதை சரண்டர் செய்யலாம். இந்த ஆண்டு (2025-26) முழுமையாக பணி செய்தால் 15 நாள் பணப்பலனை 2026ம் ஆண்டு ஏப்ரலில் பெறலாம்.