Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளருக்கு உடனே நிலுவை ஊதியம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அரசு கல்லூரிகளின் தினக்கூலி பணியாளர்களுக்கான 9 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கி வந்த 41 உறுப்பு கல்லூரிகள் கடந்த 2019ம் ஆண்டு அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டன.

இந்த கல்லூரிகளில் 2006ம் ஆண்டு முதல் உறுப்புக் கல்லூரி செயல்பட தொடங்கியதில் இருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவாளர், பெருக்குபவர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் போன்ற ஆசிரியரல்லா பணியாளர்கள் 231 பேர் தினக்கூலி அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு அரசு பத்தாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றும் இவர்களின் பணிகளுக்காக கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை கூட செலவழிக்க முடியவில்லை என்பதை ஏற்க இயலாது.

எனவே நிலுவையிலுள்ள கடந்த 9 மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்குவதுடன் இந்த 231 பேரின் தகுதி, திறமை, பணித்திறன், அனுபவம் போன்றவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.