சென்னை: தென்மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடத்து என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகம் தங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.276 கோடியை செலுத்தவில்லை என கூறி மதுரை-குமரி டோல்வே தனியார் நிறுவனம், குமரி எட்டுரவட்டம் டோல்வே தனியார் நிறுவனம், சாலைப்புதூர்-மதுரை டோல்வே தனியார் நிறுவனம், நாங்குநேரி-குமரி டோல்வே ஆகிய 4 நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது; போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி; தென்மாவட்டத்தில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடத்து என உத்தரவிட்டார். கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி சுங்கச்சாவடி வழியே அரசு பேருந்தை அனுமதிக்க கூடாது. சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.