Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாநில அளவிலான அடைவுத் தேர்வு முடிவு குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது’ மற்றும் ‘State Level Achievement Survey’-ஐ தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் வழங்கினோம். இதற்கான ஆய்வு கிட்டத்தட்ட 36 ஆயிரம் பள்ளிகளில் 9.80 இலட்சம் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களில் தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு இருப்பது புள்ளி விவரங்களோடு கண்டறியப்பட்டுள்ளது.

நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தும், எண்ணும் எழுத்தும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றால், தமிழ்நாட்டு மாணவர்களின் கற்றல் திறன், தேசிய சராசரி மற்றும் மற்ற மாநிலங்களின் சராசரியை விட மேம்பட்டு இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதைத் தொடர்ந்து உலகுக்கு உரக்கச் சொல்வோம்! நம் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்!