தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரு முறை உயர்ந்து உச்சத்தை தொட்டது: ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை: நகை பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.960 உயர்ந்து சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து கிராம் ரூ.12,370க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனை விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து கிலோ ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரண தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ரூ.1 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இதுவரை இல்லாத வகையில் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
இந்த வருடத்திலேயே அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி ரூ.97,600க்கு தங்கம் விலை உச்சம் தொட்டது. அதேமாதம் ரூ.88 ஆயிரத்திற்கு குறைந்தது. இம்மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகின்றது. அதன்படி கடந்த 9ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.199க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.96,240க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.207க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்றும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,050க்கும், பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.96,400க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.209க்கும், கிலோவுக்கு ரூ.2000 அதிகரித்து, பார்வெள்ளி ரூ.2 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை தங்கம் விலை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,250க்கும், பவுனுக்கு ரூ.1600 அதிகரித்து ரூ.98 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் தங்கத்தை போலவே டாப் கியர் போட்டு பறக்கிறது. கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.15 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. காலையில் பவுனுக்கு ரூ.1600 அதிகரித்த நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதுபோல் வெள்ளி விலையும் தங்கத்தை போலவே உயர்ந்து வருகிறது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 2.16 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
ஏற்கனவே, நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில் கிருஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என வரிசையாக வர உள்ளதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்றும், விரைவில் ஒரு பவுன் விலை ஒரு லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.


