ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1080 சரிவு... ஒரு கிராம் ரூ.7,085-க்கும் சவரன் ரூ.56,680-க்கும் விற்பனை : நகை விரும்பிகள் உற்சாகம்!!
சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தினம் தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 31ம் தேதி தீபாவளியன்று ஒரு சவரன் ரூ.59,640 என்ற அதிகப்பட்ச உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைந்து வந்தது. இதற்கிடையில் தங்கம் விலை கடந்த 7ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்து, ஒரு சவரனுக்கு ரூ. 57,600க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து.8ம் தேதி தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அன்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280க்கும் விற்பனையானது. தொடர்ந்து 9ம் தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்தது. அன்றைய தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.7,275க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.58,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலை மேலும் அதிரடி சரிவை சந்தித்தது.அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.7,220க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் ரூ.57,760க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.56,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனிடையே சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 12 நாட்களில் ரூ.2.960 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.