சென்னை: தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. கடந்த 5ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,480க்கு விற்பனையானது. 6ம் தேதி (நேற்று முன்தினம்) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட் விடுமுறையாகும். இதனால், தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் தொடங்க நாளான நேற்று தங்கம் விலையில் அதிரடியாக மாற்றம் காணப்பட்டது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.9,010க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.72,080க்கும் விற்பனையானது. இந்த விலைக் குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலையில் நேற்று மாற்றம் ஏதுவும் ஏற்படவில்லை.
Advertisement


