திருவனந்தபுரம் : மஸ்கட்டில் இருந்து கேரளாவின் கண்ணூர் வந்த விமானத்தில், 960 கிராம் தங்கக் கட்டிகளைத் தனது ஆசனவாயில் மறைத்து கடத்தி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கேபின் ஊழியர் சுரபி கதுன் கைது செய்யப்பட்டார். கண்ணூர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரிடம் சோதனை செய்யப்பட்டது. சுரபி பல காலங்களாகத் தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்தது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.
Advertisement