பனாஜி: கோவாவில் கடந்த 6ம் தேதி பிர்ச் ரோமியோ லேன் இரவு விடுதியில் எதிர்பாராதவிதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அனைத்து இரவு விடுதிகளில் அரசு குழு ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆய்வின் அடிப்படையில் வடக்கு வாகேட்டர் பகுதியில் கடற்கரையில் குன்றின் மீது அமைந்துள்ள முக்கிய இரவு விடுதியான கபே சிஓ2 கோவா நேற்று சீல் வைக்கப்பட்டது. பல்வேறு விதிமீறல்கள் காரணமாக கிளப்புகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


