பனாஜி: கோவாவின் அர்போராவில் உள்ள பிர்ச் பை ரோமியோ லேன் இரவு விடுதியில் கடந்த சனியன்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 20 பேர் விடுதியில் வேலை செய்து வந்த ஊழியர்கள். டெல்லியை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் சுற்றுலா பயணிகள். இந்த பயங்கர தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து தொடர்பாக இரண்டு உரிமையாளர்கள், மேலாளர் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களில் ஒருவரான சவுரப் லூத்ரா தீவிபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். விடுதி ஊழியர் ஒருவரை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் பாரத் கோஹ்லி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவா நைட் கிளப் உரிமையாளர்களான லுத்ரா சகோதரர்கள் தாய்லாந்து தப்பி ஓடிவிட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க கோவா போலீசார் இன்டர்போல் உதவியை நாடி உள்ளனர்.
+
Advertisement


