Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஜூன் 7ம் தேதிக்கு பின் உலகளாவிய அழிவு ஏற்படும்: பிரபல தீர்க்கதரிசி கணிப்பு

டோக்கியோ: ஜூன் 7ம் தேதிக்கு பின்னர் உலகளாவிய அழிவு ஏற்படும் என பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி பாபா வெங்கா (வாங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா), 1911ல் பிறந்து, 12 வயதில் பார்வையை இழந்தார். உலகளவில் தனது துல்லியமான முன்கணிப்புகளால் புகழ்பெற்றவர்.

அவரது முன்கணிப்புகளில் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, 9/11 தாக்குதல், 2004 சுனாமி, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் கொரோனா தொற்றுநோய் ஆகியவை உண்மையாகியவை என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இந்தாண்டில் பாபா வெங்கா கணித்திருந்த மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த மார்ச் 28ல் நடந்த 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 3,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது அவரது கணிப்பில் உண்மையானது.

மேலும், அவர் 2025ல் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, மூன்றாம் உலகப் போர், சிரியாவின் வீழ்ச்சியால் உலகளவில் மோதல்கள் தொடங்கும் எனவும் கணித்திருந்தார். இந்நிலையில் பாபா வெங்காவின் முன்கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதாவது ஜூன் 7ம் தேதிக்கு பின்னர் (நாளை), உலகளாவிய அழிவு ஏற்படும் என்ற கணிப்பு, உலகளவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது முன்கணிப்புபடி வரும் ஜூலையில் ஜப்பான், தைவான், இந்தோனேசியாவை பாதிக்கும் வகையில் மிகப்பெரிய சுனாமி குறித்த ஜப்பானிய முன்கணிப்பாளர் ரியோ தட்சுகியின் கணிப்புடன் ஒத்துப் போகிறது. புவியியல் அல்லது பொருளாதார அழிவை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களது கணிப்புகளுக்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றாலும், செய்தி ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.