Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

கோவை: கோவையில் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பெண் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கோவை ரத்தினபுரி விஸ்வநாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (48). வக்கீல். இவரை நேற்று மதியம் 4 பேர் அவரது காரில் அழைத்து சென்றனர். செட்டிபாளையம் அருகே உள்ள மயிலேறிபாளையத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி 4 பேரும் வக்கீல் உதயகுமாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கும்பல், காரில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உதயகுமாரை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி உயிருக்கு போராடினார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் உதயகுமாரின் மர்ம உறுப்பை அரிவாளால் அறுத்தும், சிதைத்தும் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர், அவரை காரில் இருந்து தூக்கி வீசி விட்டு தப்பி சென்றனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், படுகொலை செய்யப்பட்ட வக்கீல் உதயகுமார் விஸ்வநாதபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்ததும், இவரது மனைவி நித்தியவள்ளி. கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து கொலையாளிகள் யார்? அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இந்த கொலை நடந்தது என விசாரித்டுஹ் வருகின்றனர். விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உதயகுமாரை காரில் 4 பேரும் அழைத்து சென்று பெண் விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த கும்பலுக்கு எதிராக உதயகுமார் பேசியதாக தெரிகிறது. அவரது ஆணுறுப்பை சிதைத்து கொலை செய்து உள்ளதால் அவர் பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.