திகம்கர்: பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக மத்தியபிரதேச காங்கிரஸ் பேரவை உறுப்பினரின் மகன் வீட்டில் அசாம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். மத்தியபிரதேச திகம்கர் நகரின் தல் தர்வாஜா பகுதியில் வசிப்பவர் யத்வேந்திர சிங் புந்தேலா முன்னாள் அமைச்சரும், மத்தியபிரதேச திகம்கர் பேரவை காங்கிரஸ் உறுப்பினருமான யத்வேந்திர சிங் புந்தேலாவின் மகன் ஷாஷ்வத் சிங். ஷாஷ்வத் சிங் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அசாம் மாநில காவல்துறையினர் ஷாஷ்வத் சிங்கிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக யத்வேந்திர சிங் புந்தேலாவின் வீட்டில் அசாம் காவல்துறையினர் 3 மணி நேரத்துக்கும் மேலாக நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது எதுவும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் வௌியிடப்படவில்லை.