ரூ.10 ஆயிரம் கோடி மோசடி புகார் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மைவி3 ஆப் நீக்கம்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
கோவை: விளம்பரங்கள் பார்ப்பது மூலம் வீட்டில் இருந்தபடியே சுலபமாக சம்பாதிக்கலாம் என மைவி 3 ஆப் என்ற ஆன்லைன் நிறுவனம் பொதுமக்களிடம் ரூ.10 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து இந்நிறுவனத்தின் நிறுவனர் விஜயராகவன் (45), பீளமேடு பகுதியை சேர்ந்த சத்தி ஆனந்தன் (36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விஜயராகவன் கைது செய்யப்பட்டார். சத்தி ஆனந்தன் சரணடைந்தார். இருவரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் மைவி3 ஆப் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முதலீடு செய்த பல லட்சம் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். செயலி முடங்கியதால், முதிர்வு தொகை, தவணை தொகை பெற இயலாது. புதிதாக இந்த செயலியில் முதலீட்டாளர்களாக சேர முடியாது என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.