சென்னை: சென்னையில் இன்று நடக்கும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால் பந்து போட்டியில் சென்னையின் எப்சி - ஒடிசா அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் புள்ளிப் பட்டியலில் சென்னையின் எப்சி 14 போட்டிகளில் மோதி 4 வெற்றி, 3 டிரா, 7 தோல்விகள் பெற்று 15 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் உள்ளது. இந்த அணி சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் போட்டியில் ஒடிசா அணியை எதிர்கொள்கிறது.
கடந்த செப்டம்பரில் ஒடிசா அணியுடன் நடந்த போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஒடிசா அணி, ஐஎஸ்எல் புள்ளிப் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது. அந்த அணி 14 போட்டிகளில் மோதி, 5 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகள் பெற்றுள்ளது. கடந்த போட்டியில் வென்ற அணி என்பதால் இன்று நடக்கும் போட்டியில் சென்னை அணி மீண்டும் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.