திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷைன் டோம் சாக்கோ. தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ஷைன் டோம் சாக்கோ ஒரு மலையாள படப்பிடிப்பின் போது தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார் என்று பிரபல மலையாள நடிகையான வின்சி அலோஷியஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஷைன் டோம் சாக்கோவும், வின்சி அலோஷியசும் இணைந்து நடித்த சூத்ரவாக்கியம் என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று கொச்சியில் நடந்தது. இதில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது வின்சி அலோஷியசிடம் தான் மோசமாக நடந்து கொண்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷைன் டோம் சாக்கோ கூறினார்.
Advertisement


