கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்து 81 நாட்களுக்குப் பிறகு சஞ்சய் ராய்க்கு எதிராக கொல்கத்தா சியால்டா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வெளியே வந்த குற்றவாளி ராய் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனது தரப்பு நியாயத்தை யாருமே கேட்க முன்வரவில்லை.
அரசு என் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. என்னை வாய் திறக்க விடாமல் மிரட்டுகிறது’’ என்றார். ராயின் குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டுமெனவும், இதில் மேற்கு வங்க போலீசாரின் பங்கு குறித்தும் விசாரிக்க வேண்டுமென மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் சவுத்ரி கூறி உள்ளார்.


