அரக்கோணம்: அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு சீரானது. அரக்கோணம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் புளியமங்கலம் அருகே தண்டவாள இணைப்பில் கோளாறால் ஏற்பட்டது.
சென்னை செல்ல வேண்டிய பல்வேறு விரைவு ரயில்கள் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை- பெங்களூரு, நீலகிரி எக்ஸ்பிரஸ், காவேரி விரைவு ரயில் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. தண்டவாள பழுதினை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னையில் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர் மார்க்கெட்-திருவள்ளூர்-அரக்கோணம், மூர் மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை-வேளச்சேரி ஆகிய இடங்களுக்கு புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இருந்தாலும், மிகவும் குறைவான கட்டணத்தில் சரியான நேரத்தில் மக்களை கொன்டு சேர்ப்பதில் புறநகர் ரயில்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் வேலைக்கு வருபவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புறநகர் ரயில்கள் கைகொடுத்து உதவுகின்றன. ஆகையால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்படும் போதெல்லாம் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். இந்ந்நிலையில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் தண்டவாள இணைப்பில் கோளாறு ஏற்பட்டது.
அதாவது சென்னை வியாசர்பாடியில் மின்சார ரயிலையும் மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்ததால் மின்சார ரயில் நடுவழியில் நின்றது. இதனால் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


