Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நவ 1ல் செயற்குழு கூட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் ஒரேநாளில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நவம்பர் 1ம் தேதி நடைபெறும். சென்னையில் பெரம்பூர், ஆர்.கே.நகர், ராயபுரம், துறைமுகம், திரு.வி.க.நகர், கொளத்தூர், மயிலாப்பூர், சேப்பாக்கம், தி.நகர், வில்லிவாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆயிரம்விளக்கு, எழும்பூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் கவுரவத் தலைவர்

ஜி.கே.மணி, கடலூர், குறிஞ்சிப்பாடி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூரில் வன்னியர் சங்க மாநில செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாநில இளைஞர் சங்க தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், காஞ்சிபுரம், உத்திரமேரூரில் மாநில துணைத் தலைவர் ரவிராஜ், திருவள்ளூர் மாவட்டம், மாதவரம், திருவொற்றியூர், திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மதுரவாயல், பூந்தமல்லியில் மாநில நிர்வாககுழு உறுப்பினர் பரந்தாமன் ஆகியார் தலைமை சார்பில் கலந்து கொள்கின்றனர்.