சென்னை: அகழாய்வு பயணம் சரியான திசையில் செல்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழர் வரலாறு, பண்பாட்டை அறிவியல் சான்றுகளுடன் எடுத்துக் கூறுவதற்கான பயணம் சரியான திசையில் செல்கிறது. பயணம் சரியான திசையில் செல்வதை அகழாய்வு பொருட்கள் உறுதி செய்கின்றன. இந்திய துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம் என்று கூறியுள்ளார்.
Advertisement