Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யூரோ கால்பந்து தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஸ்பெயின் சாதனை

பெர்லின்: யூரோ கால்பந்து தொடரில் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஸ்பெயின் சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றன. நடப்பு சாம்பியன் இத்தாலி நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது. பெர்லின் ஒலிம்பிக் அரங்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற பைனலில் ஸ்பெயின்-இங்கிலாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களுக்கும் கோல் அடிப்படித்தற்காக கடுமையாக போராடினர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரரும், 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரரும், தங்களுக்கு கிடைத்த free kick வாய்ப்பை வீணடித்தனர்.

போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றாலும் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2ம் பாதி தொடங்கியதும் ஆட்டம் 47வது நிமிடத்தில் ஸ்பெயினின் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் அற்புதமான கோல் அடித்து அசத்தினார். ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் அபாரமாக கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பெயின் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய மைக்கெல் ஆட்டத்தின் 86வது நிமிடத்தின் போது கோல் அடித்தார். கடைசி நிமிடங்களில் இங்கிலாந்து அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சித்தாலும் ஸ்பெயின் வீரர்கள் தங்கள் அதை தடுத்து நிறுத்தி 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். முன்னதாக 1964, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் அணி யூரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. யூரோ தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று, அதிக முறை யூரோ கோப்பை பட்டம் வென்ற அணியாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.

இத்தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது. களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாகவும் ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 16 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.