Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் ஒன்றிய அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஆரணி: கச்சா எண்ணெய்க்கு 70 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் அதியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கு காரணம் ஒன்றிய அரசுதான் என ஆரணியில் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆரணி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து நேற்று ஆரணி அடுத்த சேவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய அரசு கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து, அதற்கு 70 சதவீதம் வரியை விதித்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்திய அளவில் பல தேசிய விருத்துகளை பெற்றது அதிமுக அரசு. அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிதான் 40 தொகுதியிலும் வெற்றிபெறும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை ஆதிதிராவிடர் மக்களுக்கு 400 சதுர அடியில் வீடு கட்டி கொடுக்கப்படும். அதனால், ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பேட்பாளர் ஜி.வி.கஜேந்திரனுக்கு இரட்டை சின்னத்திற்கு வாக்களித்து தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.