ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அபார வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திமுகவை எதிர்த்து போட்டியிட்ட நாதக வேட்பாளர் உட்பட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். அதிமுக, பாஜக போட்டியிடாத நிலையிலும் நாதகவால் டெபாசிட் பெற முடியவில்லை.

