சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் அறிக்கை: அதிமுக அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கணவர் சந்திரசேகர் உடல்நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் கோகுல இந்திராவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
+
Advertisement


