Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்: டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக ஈரான் மதகுரு பேச்சு

தெஹ்ரான்: ஈரான் மதகுரு அயதுல்லா நாசர் மகரேம் ஷிராசி அரபு மொழியில் வெளியிட்ட பத்வாவில்,’இஸ்லாம் மதத்துக்கு தூணாக இருப்பவர்களுக்கு, குறிப்பாக உச்ச தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது இஸ்லாம் மத அமைப்பில் தடைசெய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் மத தலைவர்களைப் பாதுகாப்பதும், அத்தகைய அச்சுறுத்தல்களைச் செய்பவர்களை எதிர்கொள்வதும் நமது கடமையாகும், மேலும் இந்த புனிதத்தை மீறுவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும். இஸ்லாமிய குடியரசு தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை வீழ்த்த உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். அவர்கள் அத்தகைய செயலைச் செய்தால், கடுமையான மற்றும் தெய்வீக தண்டனையை எதிர்கொள்வார்கள், மேலும் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள். இத்தகைய வெளிப்படையான குற்றங்களுக்கு பொறுப்பான இவர்களை முஹாரிப் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஈரான் பலி 935ஆனது

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 935 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 627 பேர் தான் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று 935 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியான 935 பேரில் 38 பேர் குழந்தைகள் மற்றும் 132 பேர் பெண்கள்.