Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இமானுவேல் சேகரன் மணிமண்டப பணிகள் டிசம்பரில் நிறைவடையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் மக்களுக்காக உழைத்தவர்களுக்கும், சுதந்திரத்திற்காக போராடியவர்களுக்கும் மணி மண்டபம் கட்டுவதோடு, அரசு விழா என அவர்களுக்கு மரியாதை கொடுத்து வருகிறார். அதுபோல் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு 50 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு ரூ.3 கோடி செலவில் 8,460 சதுர அடியில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தியுள்ளேன்.

மணிமண்டபம் என்பது பிறந்தநாள் அல்லது நினைவு நாளில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கருதி தமிழக முதல்வர் அனைத்து மணிமண்டபங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பல்நோக்கு அரங்கு அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணிமண்டத்தில் 500 பேர் அமரக்கூடிய பல்நோக்கு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 150 நபர்கள் அமர்ந்து உணவு உண்பதற்கான உணவுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.