சென்னை: புயல் காரணமாக, மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, 30ம் தேதி(நேற்று) முதல் வருகிற 9ம் தேதி வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள், அபராதத் தொகை இல்லாமல் வருகிற 10ம் தேதி வரை செலுத்த காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Advertisement