ரயில்களில் தண்ணீரை கொதிக்க வைக்கும் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: ரயில்களில் தண்ணீரை கொதிக்க வைக்கும் எலக்ட்ரிக் கெட்டில் பயன்படுத்தினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் செல்போன் சார்ஜ் பாயிண்ட்களை தவறாக பயன்படுத்தி கெட்டில் மூலம் டீ, காபி போடுவதாக புகார் எழுந்தது. ரயில்களில் கெட்டில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

