சென்னை: தேர்தல் நேரத்தில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, மாநில புலனாய்வு பிரிவு, சைபர் காவல்துறை, சிஆர்பிஎப், மாநிலவரி குற்றப்புலனாய்வு பிரிவு, டிஆர்ஐ, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் என மொத்தம் 15க்கும் மேற்பட்ட துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக பதற்றமான தொகுதிகளை அடையாளம் காணும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தலை மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும், பாதுகாப்புடனும் நடத்துவதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தல் ஆணையம் திட்டமிடல் மற்றும் துறைகள் இடையேயான ஒருங்கிணைப்பில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement


