தேர்தல் பத்திர ஊழல் குறித்து எஸ்ஐடி விசாரிக்க கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரரைண: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தகவல்
கொல்கத்தா: தேர்தல் பத்திர ஊழல் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரைணக்கு வர உள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என கடந்த பிப்ரவரி 15ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ‘‘நாடு முழுவதும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளின் தரப்பில் விசாரணைக்காக சிக்கிய பல்வேறு நிறுவனங்கள் தான் தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி அளித்துள்ளன. எனவே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்புக்கு மாற்றி அமைத்து விரிவாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த பொதுநல மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என வழக்கறி!ர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். கொல்கத்தா பிரஸ் கிளப்பில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரசாந்த் பூஷன், “தேர்தல் பத்திர திட்டம் இந்திய ஜனநாயக வரலாற்றின் மிகப்பெரிய ஊழல். இதுகுறித்து உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் சுதந்திரமான, நடுநிலையான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். தேர்தல் பத்திர ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறையை சிறப்பு புலனாய்வு குழுவில் சேர்க்க கூடாது” என்று கூறினார்.