நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 3 நாட்களாக 480 காசாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று, என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மாற்றம் செய்தார். இதன்படி முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 30 காசுகள் குறைக்கப்பட்டது.
இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


