நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் நேற்று முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தினார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 455 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதால், அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.