கோவிட் உபகரணங்கள் முறைகேடு புகாரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா எதிராக வழக்கு பதிந்து விசாரணை நடத்த பரிந்துரை
பெங்களூரு : கோவிட் உபகரணங்கள் முறைகேடு புகாரில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் சுகாதார அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு எதிராக வழக்கு பதிந்து விசாரணை நடத்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.


