எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு..!!
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் தயாநிதி மாறன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். எடப்பாடி மீது வழக்கு தொடர்வதற்காக முன்னாள் ஒன்றிய அமைச்சர் தயாநிதி மாறன் எழும்பூர் நீதிமன்றம் வந்துள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாக மனுவில் தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.


