எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த புகாரில், போலீசார் விசாரணையை தொடரலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : எடப்பாடி பழனிசாமி வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த புகாரில், போலீசார் விசாரணையை தொடரலாம். அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 தேர்தலில் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்ததாக அளித்த புகாரில், போலீசார் விசாரிக்க சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர் நீதிமன்றம் நீக்கியது.


