புதுடெல்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனரான சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்திய வருவாய் அதிகாரியான ராகுல் நவீன் பொறுப்பு இயக்குனராக இருந்து வந்தார். இந்நிலையில் ராகுல் நவீன் அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குனராக, கூடுதல் செயலாளர் பதவி மற்றும் ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சரவையின் நியமன குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement