போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமின்
சென்னை: போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்தில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகிய இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.10ஆயிரத்துக்கான சொந்த ஜாமினிலும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமினிலும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


