கண்டாச்சிபுரம்: ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி கூலி தொழிலாளியிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஆக்டிங் டிரைவரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கெடார் அடுத்த அரியலூர் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(36). இவர் ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வருகிறார். தனது அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளி விசு(30) என்பவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு ஆக்டிங் டிரைவாக பணியாற்றி இருக்கிறேன், எனக்கு ஆவின் நிறுவன அதிகாரிகளை தெரியும் எனவும் எனவே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறி விசுவிடம் ரூ.4 லட்சம் கேட்டுள்ளார்.
அதனை நம்பி விசு கூகுல் பே, வங்கி கணக்கு மூலமும் ரூ.4 லட்சத்து 5 ஆயிரம் அனுப்பியுள்ளார். ஆனால் சுரேஷ் வேலை வாங்கி தராமல் இருந்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதுபற்றி விசு கொடுத்த புகாரின்படி, கெடார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து சுரேஷை கைது செய்தனர்.


