Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி சென்னையின் 3 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் சென்னையின் 3 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக, என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் ஆற்காடு சாலையில் வடபழனி சந்திப்பு, பவர் ஹவுஸ் மற்றும் ரங்கராஜபுரம் மெயின் ரோடு சந்திப்பு ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய்கள் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி இன்று இரவு 9 மணி முதல் நாளை இரவு 9 மணி வரை நடைபெறுவதால், மண்டலம் 8, 9 மற்றும் 10க்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (டயல் பார் வாட்டர்) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.