திராவிடல் மாடல் அரசு செவிலியர்களுக்கு எப்போதும் பக்க பலமாக நிற்கும்: துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை: நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட Tamil Nadu Nurses and Midwives Council நம் திராவிடமாடல் அரசின் காலத்தில் நூற்றாண்டு காண்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் இன்று பங்கேற்றுள்ளார். இந்தக் கவுன்சிலை அங்கீகரிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, "Trained nurses are the cornerstone of modern public health" என்று புகழ்ந்தார் சமூகப் போராளி மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் அவர்கள்.
Tamil Nadu Nurses and Midwives Council-இன் 2.5 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் மருத்துவத் தொண்டில் ஈடுபட்டு வருகிறார்கள். கிராமப்புற சுகாதார கட்டமைப்பின் அடித்தளமாக இருப்பது முதல், பெருந்தொற்று , பேரிடர் மற்றும் போர் காலங்கள் அனைத்திலும் மனிதகுலத்தைக் காக்கும் முன்கள வீரர்களாக சேவையில் ஈடுபடும் செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் Tamil Nadu Nurses and Midwives Council இன்னும் பல நூற்றாண்டுகள் காணட்டும் என்று இந்நிகழ்வில் வாழ்த்தினார்.