Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இரட்டைக்கொலை எதிரொலியாக இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை

குத்தாலம்: இரட்டை கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரக்கத்திற்குட்பட்ட முட்டம் பகுதியில் இன்ஜினியரிங் மாணவர் ஹரி சக்தி உள்பட 2 பேர், சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக பெரம்பூர் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கும், தஞ்சை மாவட்டம் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் மலைச்சாமியை பெரம்பூர் காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று உத்தரவிட்டுள்ளார்.