சென்னை: அண்ணா பல்கலை விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த எங்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி வழங்கி உள்ளது. காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், காவல்துறையினர் எந்த பாரபட்சமும் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும். விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் தரப்பினர் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி பாமகவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Advertisement


