திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!!
டெல்லி : திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். மாநிலங்களவையில் விவாதம் நடத்தக் கோரி திருச்சி சிவா எம்.பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.

