சென்னை: திமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அதிக விலை கொடுத்து அதானி நிறுவனத்துடன் சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கட்டுக்கதை பரப்பப்படுகிறது. அதானியை முதல்வர் சந்தித்ததுபோல் தொடர்ந்து கற்பனையான தகவல்களை கட்டுக்கதைபோல் வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் சீர்குலைந்த மின்வாரியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநிமிர வைத்துள்ளார்.
Advertisement