Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது!

சென்னை: தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது. தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக இணைப்பதற்கு வியூகம் வகுத்துள்ளது. 2026 சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுத்தல்களை வழங்குகிறார்.