Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

8 மற்றும் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி, கடந்த 2024-25ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கான இணையதள கலந்தாய்வு கடந்த 28ம் தேதியுடன் நிறைவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தற்போது 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை நாளை முதல் அடுத்த 15 நாட்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் நடைபெறவுள்ளது. மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். மேலும், கடந்தாண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களில் 80 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இதுதவிர, அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் சந்தேகம் ஏற்பட்டால் 9499055689- என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.