Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்களுக்கான இன்ஸ்பையர் விருது

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) முதன்மைத் திட்டங்களில் ஒன்று ‘Innovation in Science Pursuit for Inspired Research’ (INSPIRE) திட்டம். அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், ‘இன்ஸ்பையர்’ விருது வழங்கிவருகிறது. இத்திட்டம் 10-15 வயதுக்குட்பட்ட மற்றும் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதில், 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்கள் புதுமையான அறிவியல் படைப்புகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அந்தந்த மாவட்டம் வாயிலாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்படி 2024-2025 கல்வி ஆண்டுக்கான இன்ஸ்பையர் விருதுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஆக்கப்பூர்வமானயோசனைகளைக் கொண்ட ஒரு லட்சம் மாணவர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்படும்.

படைப்பாற்றல் மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு அறிவியல் மற்றும் சமூகப் பயன்பாடுகளில் வேரூன்றிய ஒரு மில்லியன் அசல் யோசனைகள்/புதுமைகளை இலக்காக வைத்து பள்ளி மாணவர்களிடையே புதுமையான சிந்தனையை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15, 2024 வரை https://www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்களின் 5 சிறந்த அசல் யோசனைகள்/புதுமைகளைப் பள்ளிகள் பரிந்துரைக்கலாம்.