ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம், எம்.எஸ்.கே. நகரில் இருந்து திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோயிலுக்கு பெண் பக்தர்கள் 18 பேர் நேற்று முன்தினம் மாலை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். திருப்பாலைக்குடி பாண்டிகோயிலில் இரவு தங்கினர். நேற்று அதிகாலை மீண்டும் அங்கிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். உப்பூர் அடுத்த நாகனேந்தல் விலக்கு பகுதியில் பக்தர்கள் சென்றபோது, அவர்கள் மீது ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் எம்.எஸ்.கே நகரை சேர்ந்த முனியசாமி மனைவி சாந்தி(50), பாலமுருகன் மனைவி புவனேஸ்வரி(40) ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். நாகஜோதி(45) உள்ளிட்ட 3 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.