Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025ம் ஆண்டுக்கான 5 வகையான விருதுகள் மற்றும் தூயதமிழ் பற்றாளர் பரிசுக்கு தகுநிறை தமிழறிஞர் பெருமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, தேவநேயப் பாவாணர் விருது - ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வீரமாமுனிவர் விருது - ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை தூயதமிழ் ஊடக விருது (அச்சு ஊடகம், காட்சி ஊடகம்) - ரூ.50 ஆயிரம்,

தங்கப்பதக்கம், தகுதியுரை (2 பேருக்கு) நற்றமிழ் பாவலர் விருது (மரபுக்கவிதை, புதுக்கவிதை) - ரூ.50 ஆயிரம், தங்கப்பதக்கம், தகுதியுரை (2 பேருக்கு) தூயதமிழ் பற்றாளர் விருது - ரூ.20 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் (38 பேருக்கு) தூயதமிழ் பற்றாளர் பரிசு - ரூ.5 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் (3 பேருக்கு) தமிழாய்ந்த பெருமக்கள் http://sorkuvai.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி,

இயக்குநர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக கட்டிடம், முதல் தளம், எண்: 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ, அல்லது http://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ 22.08.2025ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிட வேண்டும்.